இத்திட்டம் பற்றி

சட்டத்தை நிலைநிறுத்தும் முகமைகள் மற்றும் IT பாதுகாப்பு நிறுவனங்கள், பணம்கேட்பு மென்பொருளுடன் தொடர்புடைய இணையக் குற்ற வர்த்தகத்தை முறியடிக்க ஒன்றாக இணைந்தன.

“இனிமேல் பணம்கேட்பு இல்லை” வலைத்தளம் நெதர்லாந்து காவல்துறையின் தேசிய உயர் தொழில்நுட்ப குற்றப்பிரிவு, யூரோபோலின் ஐரோப்பிய இணையம்வழிக் குற்ற மையம், காஸ்பர்ஸ்கி ஆய்வகம் மற்றும் இன்டெல் செக்யுரிட்டி ஆகியவற்றினால் தொடங்கப்பட்ட முனைப்பு ஆகும். இவர்களின் இலட்சியம் பணம்கேட்பு மென்பொருள் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு அவர்களது மறைகுறியாக்கப்பட்ட டேட்டாவை குற்றவாளிகளுக்குப் பணயம் செலுத்தாமல் மீட்க உதவுவதாகும்.

சிஸ்டம் பாதிக்கப்பட்டபின் போராடுவதைவிட அச்சுறுத்தலைத் தவிர்ப்பது எளிது என்பதால், இந்தத் திட்டம் பயனர்களுக்கு எவ்வாறு பணம்கேட்பு மென்பொருள் இயங்குகிறது மற்றும் அவற்றை முறியடிக்கப் பாதிப்பிலிருந்து ஆற்றலுடன் தடுக்கும் வழிகள் யாவை எனக் கற்பித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதிகப் பங்காளர்கள் இந்தத் திட்டத்தை ஆதரிப்பதால் சிறந்த முடிவுகளைப் பெற முடியும். இத்திட்டம் பிற பொது மற்றும் தனியார் துறை பங்காளர்களுக்கும் பங்கேற்புக்குத் திறந்துள்ளது.