வலைத்தளப் பொறுப்புத் துறப்பு.

இந்த வலைத்தளம் மற்றும் உள்ளடக்கம் பல பங்காளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்கள், குறிப்பாகப் பாதிப்புக்குள்ளானோருக்குப் பணயக்கேட்புமென்பொருள் பற்றிய தகவல்களை வழங்குகிறது.  இது பாதிப்புக்குள்ளானோர் மற்றும், கருவிகள் மற்றும் தீர்வுகள் வழங்குபவர்களுக்கிடையே பாதிப்புக்குள்ளானோரின் கோப்புகளின் தடுப்புநீக்கம் மற்றும்/அல்லது மறைகுறிநீக்கம் செய்ய நல்லுறவேற்படுத்துகிறது. நீங்கள் அறிய வேண்டியவை:

  • இந்த “இனிமேல் பணம்கேட்பு இல்லை” வலைத்தளம் பிற வலைத்தளங்களுடன் இணைப்புக் கொண்டுள்ளது. இந்தத் தனித்தனி வலைத்தளங்களை உருவாக்கி, கட்டுப்படுத்தி மற்றும் பராமரிப்பவர்கள் பணம்கேட்பு மென்பொருள் தடுப்பு நீக்கம் அல்லது மறைகுறிநீக்க வழங்குனர்கள் ஆவர். இணைப்பில் கிளிக் செய்வதால் அந்த (தனி) வலைத்தளத்தின் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்கிறீர்கள்.
  • இந்த இணையத்தளத்தில் வெளி இணைப்புகளைச் சேர்ப்பதால் அவற்றில் இடம்பெற்றுள்ள பொருட்களை அல்லது சேவைகளை ஆதரிப்பதாக அர்த்தமாகாது.
  • இந்த “இனிமேல் பணம்கேட்பு இல்லை” வலைத்தளம் உங்கள் தனிநபர் டேட்டாவை சேகரிக்காது. இருப்பினும், இணைப்பு வலைத்தளங்கள் சில வர்த்தகக் காரணங்களுக்குப் பயன்படுத்தலாம். உங்கள் தனிநபர் டேட்டாவைப் முறைப்படுத்தும் பொறுப்பு அவ்வலைத்தள உரிமையாளருடையது. அவரே உங்களது முதல் தொடர்புப் புள்ளியாவார்;
  • யூரோபோல் - இந்தத்திட்டத்தின் பங்கேற்பாளர் ஆகும் — அது உங்கள் தனிநபர் டேட்டாவைச் சேகரிக்க முடியாது, மேலும் அவ்வாறு செய்யப்படுவதுமில்லை;
  • வலைத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் தகவல்கள் மற்றும் ஆலோசனைகள் பொதுத் தகவலாக மட்டுமே கருதப்படவேண்டும் மற்றும் அவை தொழில்முறைத் தகவலாகக் கருதப்படக் கூடாது. இது “அவை அப்படியே” என்ற நிலையில் தனிச் சூழலுக்கு மாற்றம் செய்யாமல் தரப்பட்டுள்ளது. நாம் எதையும் உங்கள் கோப்புகளுக்குத் தடுப்புநீக்கம் மற்றும்/அல்லது மறைகுறியாக்கத்துக்கு உத்தரவாதமுள்ள தீர்வுகளாகத் தரவில்லை மற்றும் அவை தோல்வியடைந்தால் நாம் பொறுப்பாளியுமல்லர்;
  • “இனிமேல் பணயமில்லை” வலைத்தளத்தில் காணப்படும் கண்டுபிடித்தல் மென்பொருள் பற்றிய அனைத்து தகவல்கள் மற்றும்/அல்லது மறைகுறிநீக்கக் கருவி(கள்) அவற்றின் உரிமையாளரால் வழங்கப்படுகின்றன, அவற்றின் முழுமை, துல்லியம் மற்றும் தகவல் நம்பகம் ஆகியவற்றுக்கு அவர்களே பொறுப்பு. கருவி பற்றிய கேள்வி அல்லது தகவல்களுக்குத் தயவுசெய்து கருவிகளின் உரிமையாளரை நேரடியாகத் தொடர்பு கொள்ளவும்.
  • பாதகமென்பொருள் என்பது குற்றங்கள் விரைந்து நடக்குமிடமாக இருக்கிறது. “இனிமேல் பணம்கேட்பு இல்லை” திட்டம், தனிநபர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளில் உதவுதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், கண்டுபிடிக்கும் மற்றும் விவரிக்கும் கருவிகளைப் பயன்படுத்துவது அவர்களின் சொந்தப் பொறுப்பிலேயே ஆகும்.  பாதகமென்பொருள் அதிக அழிவை ஏற்படுத்தும்படி வடிவமைக்கப்பட்டிருக்கலாம், இந்த வலைத்தளத்துடன் தொடர்புடைய பங்காளர்கள் எந்தச் சூழலிலும் பிறருக்கு ஏற்பட்ட டேட்டா இழப்பு மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்குப் பொறுப்பேற்க மாட்டார்கள்.
  • இந்த வலைத்தளம் தற்காலிகமாக சில கட்டுப்பாட்டில் இல்லாத தொழில்நுட்ப பிரச்சினைகளால் கிடைக்காவிடில், பங்காளர்கள் பொறுப்பேற்கமாட்டார்கள்.
  • பன்னாட்டுச் சட்டங்களின்படி பாதுகாக்கப்பட்ட பின்வரும் பெயர்கள் மற்றும் இலச்சினைகள் பங்காளர்களுக்குச் உடமையானது. அவற்றின் அங்கீகாரமற்ற பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.
    • யூரோபோல் பெயர் மற்றும் இலச்சினை
    • EC3 பெயர் மற்றும் இலச்சினை
    • “de Politie” பெயர் மற்றும் டச்சு காவல்துறையின் இலச்சினை
    • McAfee அயர்லாந்து லிமிடட் மற்றும் சின்னம் (McAfee)
  • இந்த வலைத்தளம் குக்கீஸ்களைப் (cookies) பயன்படுத்துகிறது: கூகிள் பகுப்பாய்வு சாதாரணமான, எளிதாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு கருவியாகும். வலைத்தள உரிமையாளர்கள் வலைத்தளப் பக்கங்களில் உள்ளவற்றுடன் எப்படி தொடர்பு வைத்துள்ளனர் என்பதை அளப்பதற்கு உதவுகிறது இக்கருவி. வலைப்பக்கங்களுக்கு செல்கின்றபோது, பயனீட்டாளர் பார்த்த பக்கத்தைப் பற்றிய தகவலைப் பதிவுசெய்ய, கூகிள் பகுப்பாய்வு வலைத்தள உரிமையாளர்களுக்கு ஜாவாஸ்கிரிப்ட் குறிச்சொற்களை (நூலகங்கள்) JavaScript tags (libraries) வழங்குகிறது. உதாரணத்திற்கு, அந்தப் பக்கத்தின் URL. கூகிள் பகுப்பாய்வு ஜாவாஸ்கிரிப்ட் நூலகங்கள், HTTP குக்கீஸ்களைப் பயன்படுத்தி, பயனீட்டாளர் ஒருவர் முந்தையப் பக்கங்களில் என்ன செய்தார் / வலைத்தளத்துடன் உள்ள தொடர்புகள் ஆகியவற்றை "நினைவில்" வைத்துக்கொள்ளும். கூகிள் பகுப்பாய்வு வாடிக்கையாளர்களின் வலைத்தளங்களில் பயனீட்டாளர்களுடைய செயல்கள் குறித்து புகார் அளிப்பதற்கு, கூகிள் பகுப்பாய்வு முக்கியமாக முதல்-தரப்பு குக்கீஸ்களையே பயன்படுத்துகிறது. தனிப்பட்ட முறையில் அடையாளம் காணமுடியாத தகவலைச் சேமித்துவைத்துக்கொள்ள இந்த குக்கீஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன. இணைய உலாவிகள், களங்களில் (domains) முதல்-தரப்பு குக்கீஸ்களைப் பகிர்ந்துக்கொள்ளமாட்டா.
    மேல் விவரங்களுக்கு, கூகிள் பகுப்பாய்வு தனியுரிமைக் கொள்கையைப் பார்க்கவும்.