தடுப்பு ஆலோசனை

WannaCry கூடுதல் தடுப்பு ஆலோசனை

  1. smb v1 –ஐ செயல்நீக்கவும், இது WannaCry -ஐ உங்கள் பிணையத்துக்குள் பரவுதைத் தடுக்கும்.
  2. Microsoft பேட்ச்களை நிறுவவும், இதுவும் WannaCry உங்கள் பிணையத்துக்குள் பரவுவதைத் தடுக்கும். மேலும் அதிகத் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

பணம்கேட்பு மென்பொருள் தாக்குதலை எவ்வாறு தடுப்பது?

  1. காப்புப்-பிரதி எடுங்கள்! காப்புப்-பிரதி எடுங்கள்! காப்புப்-பிரதி எடுங்கள்! ஒரு புனரமைப்பு சிஸ்டத்தை ஏற்படுத்துங்கள். எனவே, பாதிப்பு உங்கள் தனிபட்ட டேட்டாவை முற்றிலுமாக அழிக்க முடியாது. இரண்டு காப்புப்-பிரதிகளை உருவாக்குவது சிறப்பானது: ஒன்று கிளவுடிலும் (உங்கள் கோப்புகளைத் தானாக காப்புப்-பிரதியெடுக்கும் சேவையைப் பயன்படுத்த நினைவிற்கொள்ளுங்கள்), இன்னொன்றைப் பருப்பொருளாக (போர்டபிள் ஹார்ட் டிரைவ், தம்ப் டிரைவ், கூடுதல் மடிக்கணினி, பிற சாதனங்கள்). நீங்கள் இதை முடித்ததும் கணினியிலிருந்து இவற்றின் இணைப்பைத் துண்டிக்கவும். ஏதேனும் விபத்தாக நீங்கள் முக்கியக் கோப்பை நீக்கிவிட்டால் அல்லது ஹார்ட்-டிரைவ் பழுதாகிவிட்டால் உங்களது காப்புப்பிரதி உறுதுணையாக இருக்கும்.
  2. பணம்கேட்பு மென்பொருள் தாக்குதலில் இருந்து உங்கள் சிஸ்டத்தைப் பாதுகாக்க வலிமையான ஆன்டி-வைரஸ் மென்பொருளைப் பயன்படுதவும். ‘ஹியுரிஸ்டிக் ஃபங்ஷன்’ –ஐ ஆஃப் செய்ய வேண்டாம். இது பணம்கேட்பு மென்பொருள் மாதிரிகள் இன்னும் கண்டுபிடிக்கப் படாமலிருந்தால் அவற்றைக் கண்டுப்பிடிக்கப் பயன்படும்.
  3. கணினியில் அனைத்து மென்பொருட்களையும் மேம்படச் செய்யவும். உங்கள் ஆப்பரேடிங் சிஸ்டம் அல்லது செயலிகளின் புதிய பதிப்பு வெளியாகும்போது அவற்றை நிறுவவும்.
  4. மெய்யாகவே, எவரையும் நம்ப வேண்டாம். எந்த கணக்கும் களவாடப்படலாம் மேலும் பாதக இணைப்புகள் உங்கள் நண்பர்களின், சகாக்கள் அல்லது ஆன்லைன் கேமிங் துணைவரின் சமூக ஊடகக் கணக்குகளிலிருந்து அனுப்பப்படலாம். நீங்கள் அறியாத பிறரிடமிருந்து வரும் மின்னஞ்சல் இணைப்பைத் திறக்க வேண்டாம். சைபர் குற்றவாளிகள் வழமையாக ஆன்லைன் ஸ்டோர், காவல்துறை, நீதிமன்றம் அல்லது வரிவசூல் முகமை போன்றவற்றின் மின்னஞ்சல் அறிவிப்புகள் போலவே போலி மின்னஞ்சல் அனுப்பி ஒரு இணைப்பை கிளிக் செய்ய வைத்து உங்கள் சிஸ்டத்துக்குள் பாதகமென்பொருளை இறக்கிவிடுவர். இது ‘பிஷ்ஷிங்’ என அழைக்கப்படும். உங்கள் ஆப்பரேடிங் சிஸ்டம் அல்லது செயலிகளின் புதிய பதிப்பு வெளியாகும்போது அவற்றை நிறுவவும். அந்த மென்பொருள் தானாக-மேம்பாடு செய்யும் விருப்பத்தேர்வு வழங்கினால் பயன்படுத்தவும்.
  5. Windows அமைப்பில் உங்கள் கணினியில் ‘Show file extensions’ விருப்பத் தேர்வைச் செயல்படுத்தவும். இது வாய்ப்புள்ள பாதகமென்பொருளை எளிதில் அடையாளம் காண உதவும். கோப்பின் எக்ஸ்டன்ஷன்கள் ‘.exe’, ‘.vbs’ and ‘.scr’ போன்றவையாக இருந்தால் திறக்க வேண்டாம். ஸ்கேமர்ஸ் பலவித பாதக கோப்புகளை காணொளி, படம் அல்லது ஆவணம் போல அனுப்புவர் (hot-chics.avi.exe அல்லது doc.scr போல).
  6. ஏதேனும் ஒரு திருட்டுத்தனமான அல்லது அறியாத ப்ராசஸ் உங்கள் கணினியில் நிகழ்ந்தால், உடனடியாக இணையத்தள இணைப்பு அல்லது பிற பிணைய இணைப்பைத் (வீட்டு Wi-Fi) துண்டிக்கவும். இது பாதிப்பு பரவுவதைத் தடுக்கும்.