பணக்கேட்புமென்பொருள் என்பது உங்கள் கணினி அல்லது கைப்பேசியை முடக்கிவிடும் அல்லது மின்னியல் கோப்புகளை மறைகுறியாக்கிவிடும் பாதகமென்பொருள் (Malware) ஆகும். இது நிகழும்போது, பணயம் செலுத்தாதவரை உங்களால் டேட்டாக்களை மீளப் பெற முடியாது. எவ்வாறாயினும் இதற்கு உத்திரவாதமில்லை, மேலும் நீங்கள் ஒருபோதும் பணயம் செலுத்தக்கூடாது!
இதைத் தடுப்பது சாத்தியமாக இருக்கிறது . இணையம் தொடர்பான எளிய பாதுகாப்பு ஆலோசனையைப் பின்பற்றுவது உங்களைப் பணக்கேட்பு மென்பொருள் பாதிப்புக்குள்ளாவதிலிருந்து தவிர்க்கும்.
துரதிர்ஷ்டவசமாக, பல சமயங்களில், பணக்கேட்பு மென்பொருள் உங்கள் சாதனங்களில் இறக்கப்படும்போது நீங்கள் காப்பு-சேமிப்பு செய்திருந்தால் அல்லது சாதனத்தில் பாதுகாப்பு மென்பொருள் வைத்திருந்தாலொழிய எதுவும் செய்ய முடியாது.
ஆயினும், சிலவேளைகளில் பணம் செலுத்தாமலே பயனர்கள் தங்கள் மறைகுறியாக்கப்பட்ட கோப்புகளை மீண்டும் அணுக அல்லது பூட்டப்பட்ட சாதனங்களைத் திறக்க வாய்ப்புள்ளது. வெவ்வேறு வகையான பணக்கேட்பு மென்பொருட்களால் பூட்டப்பட்ட டேட்டாக்களை விடுவிக்க நாங்கள் திறவுகோல்கள் மற்றும் செயலிகள் களஞ்சியத்தை உருவாக்கியுள்ளோம்.
தற்போது எல்லா வகை பணக்கேட்பு மென்பொருளுக்கும் தீர்வு இல்லை. சாதனங்களைப் பாதுகாக்கும் திறவுகோல்களும் செயலிகளும் தொடர்ந்து சேர்க்கப்பட்டுக் கொண்டிருகின்றன. அவற்றை அடிக்கடி இத்தளத்தில் தேடிப் பார்த்துக்கொள்ளவும்.