டேட்டா வழங்கல் பற்றிய ஒழுங்குமுறை

இந்த ஒழுங்குமுறை “இனிமேல் பணக்கேட்பு இல்லை” (இனி “வலைத்தளம்” எனக் குறிப்பிடப்படும்) வலைத்தளத்துக்கு தகவல் வழங்கும் முறையை வரையறுக்கிறது.

தயவுசெய்து கவனிக்கவும்! வலைத்தளத்துக்கு ஏதேனும் டேட்டாவை பதிவேற்றும் முன், ஒழுங்குமுறையில் கூறப்பட்ட நிபந்தனைகளைக் கவனமாக மதிப்பாய்வு செய்யவும். அனைத்து நிபந்தனைகளையும் தாங்கள் ஏற்றுக்கொள்ளாவிடில், தாங்கள் டேட்டாவை வலைத்தளத்துக்கு பதிவேற்றக்கூடாது.

தங்களுக்குப் பாதிப்பேற்படுத்திய பணயக்கேட்புமென்பொருள் வகையை வரையறுக்கப் பாதிக்கப்பட்ட கோப்புகளை ஸ்கேன் செய்யும் வகையில் இந்த வலைத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தீர்வு கிடைக்குமிடத்துக்கு இணைப்பு ஏற்படுத்த சோதனை செய்ய ஏதுவாக்கும். இதற்காக, வலைத்தளம் உங்களுக்குக் கோப்புகளை வலைத்தள சர்வருக்குப் பதிவேற்றும் அனுமதி வழங்குகிறது; அங்கு பணயக்கேட்புமென்பொருள் வகையை வரையறுக்கும் பொருட்டு நிபுணர்கள் அவற்றைப் பகுப்பாய்வு செய்வர்.

ஸ்கேனிங் செய்யக் கோப்பைப் பதிவேற்றுவதால், தாங்களே பதிவேற்றிய கோப்பின் சட்டப்பூர்வ உரிமையாளர் எனவும், மேலும் கோப்பு இரகசியவகை அல்லவென்றும், அதில் இரகசியத் தகவல்கள் உள்ளடங்கவில்லை எனவும் உறுதிப்படுத்துகிறீர்கள். ஸ்கேனிங்குக்கு கோப்பை தருவதின் மூலம் (ஒரு பதிவேற்றலைச் செய்தல்), வலைத்தள உரிமையாளருக்கு ஸ்கேனிங்கின்போது ஒரு தனிப்பட்டது-அல்லாத மற்றும் ஈடுகிடைக்காத கோப்பை நகலெடுக்கும், சேமிக்கும், மற்றும் நீக்கும் உரிமையைத் தருகிறீர்கள். பதிவேற்றிய கோப்பை ஸ்கேனிங் செய்த பின்பு அதை அன்பேக் அல்லது அன்பிளாக் செய்யப்படாது. ஸ்கேனிங் முடிவுகள் ஸ்கேனிங் நிறைவுற்றதும் வலைத்தளப் பக்கத்தில் காண்பிக்கப்படும். பதிவேற்றப்பட்ட கோப்பு ஸ்கேனிங் நிறைவுற்ற உடன் வலைத்தள சர்வரிலிருந்தும் நீக்கப்பட்டுவிடும்.

வலைத்தளத்துக்கு டேட்டா பாதுகாப்பான சானல் மூலம் அனுப்பப்படும்.

வலைத்தளத்தைப் பயன்படுத்தி அச்சுறுத்தல்களை கண்டுபிடிப்பது, தடுப்பது அல்லது தொற்றுநீக்குவதற்கான டேட்டாவை அல்லது குறியீடை உருவாக்குவது அல்லது பாதகமான டேட்டா அல்லது குறியீடுகளை உருவாக்குவது தடைசெய்யப்பட்டுள்ளது.

வலைத்தளச் செயல்பாடுகளில் குறுக்கிடுவது அல்லது முறையான இன்டர்பேஸ்களில் தலையிட்டு (அங்கீகாரமற்ற முறையில்) வலைத்தளத்தின் சேவைகளை அணுகுவது தடைசெய்யப்பட்டுள்ளது. பொருந்தும் ஒழுங்குமுறைச் சட்டங்கள், ஏற்றுமதி மற்றும் மறு-ஏற்றுமதி தொடர்பான விதிகள் உள்ளிட்ட சட்டப்படியான தேவைகள் வலைத்தளப் பயன்பாட்டில் பின்பற்றப்படவேண்டும்.